திருச்சி

திருச்சி இரட்டை கொலை: சரணடைந்த 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

DIN

திருச்சியில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சணம்பூண்டி மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது நண்பர் திருச்சணம்பூண்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வின்சென்ட். இவர்கள் இருவரும் ஜூன் 1-ஆம் தேதி திருச்சியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது ஓயாமாரி மயானம் அருகே ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, பஞ்சாபகேசனின் அண்ணன் கனகராஜன், பவுசுசெந்தில், வேங்கூர் சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
மேலும்,திருச்சணம்பூண்டியைச் சேர்ந்த குமார், அன்பழகன், அலமேலுபுரத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி, அதே ஊரைச் சேர்ந்த சரவணன், பாவனமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த தங்கதுரை, கண்ணன் ஆகிய 7 பேரும் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் ஜூன் 6-ஆம் தேதி சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், 7 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு திருச்சி கோட்டை போலீஸார், திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 7பேரும் மதுரை மத்திய சிறையிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு, திருச்சி மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரகண்ணன், வழக்கு விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதையடுத்து 7 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT