திருச்சி

மலைவாழ் மக்களை ஊக்குவிக்க மானியங்களுடன் பயிர் சாகுபடி திட்டம்

DIN

காலங்காலமாக சாகுபடி செய்து வந்த மலைவாழ் மக்களிடம் மலைப்பயிர்களையும் அதிகளவில் சாகுபடி செய்ய வைக்கும் நோக்கில், மலைப்பயிர்களின் பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பச்சமலைப் பகுதி பழங்குடியின மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தோட்டக்கலைத் துறை.
திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது பச்சமலைப் பகுதியில் திருச்சி மாவட்டத்தில் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களைச் சேர்ந்த தென்பாடு, கோம்பை, வண்ணாடு போன்ற கிராமங்கள் இங்கு அடங்கியிருக்கின்றன.
இங்கு அதிகமாகப் பயிரிடுவது மரவள்ளிக்கிழங்குதான். சுமார் 3,400 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிப் பயிரிடப்படுகிறது. இதிலும் குறிப்பாக கோம்பை, வண்ணாடு, தென்பாடு பகுதிகளில் மட்டும் 2,600 விவசாயக் குடும்பங்கள் மரவள்ளிக் கிழங்கைப் பயிரிட்டு வருகின்றனர். பீன்ஸ், வெங்காயம், கத்தரி மற்றும் தக்காளி போன்றவை 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
ஆனாலும், இதர தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களை அதிகளவில் பயரிட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு மானியங்களை விவசாயிகளுக்கு அளித்து, அப்பயிர்களை பயிரிட ஊக்குவிக்கிறது தோட்டக்கலைத்துறை.
வெங்காயப் பரப்பை அதிகப்படுத்த நடவடிக்கை: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் வெங்காயப் பரப்பை அதிகப்படுத்துவதற்காக 130 விவசாயிகளுக்கு ரூ. 6 ட்சம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கீழ் வெங்காயப் பரப்பு விரிவாக்கத் திட்டத்தில் 40 விவசாயிகளுக்கு ரூ. 0.80 லட்சம் மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதைத் தவிர, விவசாயிகள் தங்களது விளைபொருள்களைக் காயவைத்து விற்பனை செய்யும் வகையில் 50 விவசாயிகளுக்கு தார்பாலின் விரிப்புகளை வழங்கியுள்ளோம்.
மலைவாழ் மக்களின் தினசரி செலவுக்காக கொத்தமல்லி கீரைகள் சாகுபடி செய்யும் பொருட்டு 30 விவசாயிகளுக்கு ரூ. 72,000 மதிப்பில் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.
மேலும், விவசாயிகள் தங்களுக்குத் தேவைப்படும் மண்புழுஉரங்களை உற்பத்தி செய்வதற்காக ரூ.1 லட்சம் செலவில் 2 மண்புழு உர உற்பத்தி கூடங்களையும் அமைத்து தந்துள்ளோம் என்றார் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி.
நவீன சாகுபடித் திட்டத்துக்கு...: காலம் காலமாக மரவள்ளிக்கிழங்குப் பயிர்களை மலைவாழ் மக்கள் சாகுபடி செய்து வந்தாலும், மலைப்பயிர்களையும் அவர்கள் அதிகளவில் சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் பழங்குடியினரை ஊக்கப்படுத்தி வருகிறோம். நவீன சாகுபடித் திட்டத்தில் மலைவாழ் மக்களும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் ரூ.1.40 லட்சம் செலவில் நிழல்வலைக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குறைந்த நாள்களில் வருமானம் தரும் கொத்தமல்லி, புதினா சாகுபடி செய்து பயன்பெற்று வருகின்றனர்.
மலைப்பகுதியில் கிடைக்கும் தண்ணரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில், தோட்டக்கலைப் பயிர்களைச் சாகுபடி செய்ய 409 விவசாயிகளுக்கு ரூ. 1.02 கோடியில் சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசன அமைப்புகளையும் வழங்கியுள்ளோம். மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டாலும் அவர்களுக்கு உரிய விலை கிடைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இதிலிருந்து அவர்கள்விடுபடும் வகையில் மலைப்பயிர்களை அதிகளவில் பயிரிட வேண்டும் என்ற நோக்கில் மிளகு, பீட்ரூட், கேரட், பீன்ஸ் மற்றும் முள்ளங்கி போன்ற காய்கறிகளையும் மலைவாழ் மக்கள் சாகுபடி செய்யவேண்டும் என அவர்களை ஊக்குவித்து பல்வேறு மானியத் திட்டங்களின் கீழ் உதவிகளையும் வழங்கி வருகிறோம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT