திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 40 லட்சம்  தங்கம் பறிமுதல்: கடத்தலுக்கு உதவிய அதிகாரி, பயணி கைது

DIN

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 40 லட்சம் தங்கம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடத்தலுக்கு உதவிய குடியேற்றப்பிரிவு அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
 மலேசியியாவிலிருந்து  புதன்கிழமை இரவு வந்த  ஏர் ஏசியா விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். கேமராவில் பயணிகளின் நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டது. இதில், திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சாதிக்அலி என்பவரின் நடவடிக்கையில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியபோது, அவரது உடமையை குடியேற்றப்பிரிவு அதிகாரியான (இமிக்கிரேசன் உதவி ஆய்வாளர்)  பாலாஜிபாஸ்கரிடம் கொடுத்திருந்ததும்,  அதனை அவர் பத்திரமாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து  உடைமைகளை சோதனை செய்தபோது தலா 100 கிராம் எடையுள்ள 16 தங்கக் கட்டிகளை (மொத்தம் 1,600 கிராம்) மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.  அவற்றின் மொத்த மதிப்பு ரூ,. 40 லட்சமாகும்.
பாலாஜிபாஸ்கரிடம் நடத்திய  விசாரணையில், கடத்தல் ஆசாமிகளுக்கு அவர் தொடர்ந்து உதவி செய்து வருவது தெரியவந்தது.
 பயணிகள் என்ற பெயரில் கடத்தல் நபர்கள் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரும்  தங்கம் உள்ளிட்ட கடத்தல் பொருள்களை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வந்து அவர் கொடுப்பதும், அதற்காக  அவர் கடத்தல் ஆசாமிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், சாதிக்அலி மற்றும் உதவி ஆய்வாளர் பாலாஜி பாஸ்கர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சோமரசம்பேட்டையில் உள்ள உதவிஆய்வாளர் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT