திருச்சி

சொத்துத் தகராறு: இளைஞர் கொலை: 4 பேரிடம் விசாரணை

DIN

திருச்சியில் சொத்து தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை பிற்பகல் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீஸார், உறவினர் 4 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது:திருச்சி ராம்ஜிநகர், காந்திநகரைச் சேர்ந்தவர் மாயாண்டி. அவரது மகன்கள் சுப்பிரமணியன் (52), ரவி (50). செந்தில்குமார் (48). இவர்களுக்கு சொந்தமான வீடு ராம்ஜிநகர் காந்தி நகரில் உள்ளது. அந்த வீட்டில் சுப்பிரமணியன் மற்றும் செந்தில்குமார் இருவரும் பங்கிட்டு வசித்து வந்துள்ளனர். ரவி மட்டும் தனது மனைவி மருதாம்பாள் மற்றும் மகன் சரவணனுடன் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளிவாடியில் வசித்து வந்தார். இந்நிலையில், ரவியின் மகன் சரவணன் பூர்வீக சொத்தில் (வீடு) தமக்கும் பங்கு வேண்டும் எனக்கேட்டுள்ளார். இதையடுத்து, அண்மையில் ராம்ஜிநகர் வந்த ரவி குடும்பத்தினர் பங்காளிகளிடம் கலந்து பேசி தங்களது பங்கு பகுதியை கேட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து வீட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் ரவி குடும்பத்திற்கும் மற்ற இரு பங்காளிகள் குடும்பத்தினருக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது.தங்களுக்கு பிரித்துக் கொடுத்த வீட்டின் ஒரு பகுதியில் மராமத்து பணிகளை செய்து வந்துள்ளார் சரவணன். இந்நிலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட பிரச்னையில் ரவியை செந்தில்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சரவணன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது சுப்பிரமணியன் மகன்கள் கார்த்திக், மணிகண்டன், செந்தில்குமார் மகன்கள் அஜித்குமார், கௌதம் ஆகிய 4 பேரும் சேர்ந்து சரவணனை தாக்கியுள்ளனர். கார்த்திக் கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரவணனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
இதுகுறித்து ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் முகமதுஇத்தியாஸ் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, ஒன்றுவிட்ட சகோதரர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன சரவணன் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார், திருமணம் ஆகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பிரசாரத்தில் சிறுமி: பிடிபி தலைவா் மெஹபூபா முஃப்திக்கு நோட்டீஸ்

ம.பி.: பாஜகவில் இணைந்த 3-ஆவது காங்கிரஸ் எம்எல்ஏ

அரக்கோணம் ஸ்ரீ தா்மராஜா கோயில் தீமிதி விழா

திருவண்ணாமலை ரயிலில் அலைமோதும் கூட்டம்: கூடுதல் ரயில் இயக்க பயணிகள் கோரிக்கை

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

SCROLL FOR NEXT