திருச்சி

மோட்டார் வாகன ஆய்வாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

DIN

திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையை அடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில், அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், அலுவலகத்துக்கு வந்திருந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி நிர்வாகிகள், முகவர்கள் என பலரும் தங்களிடமிருந்த ரொக்கத்தை ஜன்னல் வழியாக வெளியேயும், அலுவலகத்திற்குள்ளும் வீசினர். மோட்டார் ஆய்வாளர் நல்லதம்பி மட்டுமே ரூ. 17,000 ரொக்கத்தை வீசி எறிந்தார். மேலும் ரூ. 30 ஆயிரம் வைத்திருந்தார். மொத்தம் ரூ. ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 270 பறிமுதல் செய்யப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, திருச்சி பொன்நகர் பகுதியில் உள்ள ஆய்வாளர் நல்லதம்பியின் வீட்டிலும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரூ.1.09 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக, ஆய்வாளர் நல்லதம்பி மற்றும் முகவர்கள் நாசர் முகமது, ஸ்டீபன், பன்னீர்செல்வம், சதாசிவம், சேதுராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT