திருச்சி

மக்கள் குறைகேட்பு நாளில் 69 பேருக்கு உதவி

DIN

திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில்  16 மாற்றுத் திறனாளிகள் குழந்தைகள் உள்பட 69 பேருக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப் பட்டா, அடிப்படை வசதிகள், குடும்ப அட்டை  உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 363 மனுக்களைப் பெற்று, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு  நடைப்பயிற்சி சாதனங்களை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து,   தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நலிவுற்றோருக்கான தனிநபர் கடனுதவி,  முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ்  விபத்து நிவாரணத் தொகை, விதவை மற்றும் முதியோர் உதவித் தொகை உள்பட 53 பேருக்கு ரூ. 8.56 லட்சத்தில் நலத்திட்டஉதவிகளையும் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. பஷீர்,  சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் பாலாஜி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT