முகப்பு
திருச்சி

மரவனூரில் இந்திய கம்யூ.  ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில் தொடரும் திருட்டு சம்பவங்களின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்

Updated On : 18 ஏப்ரல் 2018, 9:42 am IST
பகிர்:

மணப்பாறையில் தொடரும் திருட்டு சம்பவங்களின் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை மரவனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஒன்றிய துணை செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் த. இந்திரஜித் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயி வீட்டில் திருட்டு: கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில்  சின்னசமுத்திரம் பகுதியில் விவசாயி இளங்கோவன் வீட்டில் 2 பவுன் நகை, ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மணப்பாறை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.