முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 27 லட்சம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவிலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு வந்த விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,  இருவரது உடைமைகள் இருந்த பெட்டியில் மர்மப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.  இதில்,  சென்னையைச் சேர்ந்த  சர்புதீன்அலி என்பவர் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 341 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருந்தார். மேலும், சென்னையைச் சேர்ந்த ஜமாலுதீன் என்பவர் ரூ. 9 லட்சம் மதிப்புள்ள  289 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்திருந்தார்.
அதேபோல், சிங்கப்பூரிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனை மேற்கொண்டதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த பால்பீட்டர் என்பவர் ரூ. 8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. ஒரே நாளில் கடத்தி வரப்பட்ட ரூ. 27 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →