திருச்சி

மண்ணச்சநல்லூரில் குப்பைகளை சேகரிக்க கட்டணம்: பொது மக்கள் எதிர்ப்பு

DIN

மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டணத்துக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள தெருக்களில் தினமும் காலையில் குப்பை வண்டிகள் வந்து வீடுகளில் சேகாரமாகும் குப்பையை பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில், பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணியாளர்கள் குப்பை சேகரிப்பதற்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ. 50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டணம் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், ரூ. 50 வீதம் நிலுவையில் உள்ள மாதங்களுக்கு குப்பை கட்டணத்தைச் செலுத்தினால் மட்டுமே குடிநீர் கட்டணத்தைப் பெற்றுக் கொள்வோம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் வற்புறுத்திக் கூறி வருகின்றனர்.
எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண வசூலை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT