முகப்பு
திருச்சி

பெண்ணிடம் நகை பறிப்பு

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:14 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

முகவரி கேட்பது போல வந்து, சங்கிலி மற்றும் செல்லிடபேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கோட்டை, வெலிங்டன் வீதி,  வி.என். நகர், முதல் குறுக்குத்தெரு, மயிலவன் அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர்  உபகாராஜ் மனைவி திவ்யா (27). இவர் சனிக்கிழமை முற்பகல் வீட்டின் முன்பகுதியில் செல்லிடபேசியில் பேசியபடி நின்றிருந்தார்.  அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் ஒரு முகவரியை விசாரித்தார்.
அவருக்கு பதில் அளித்தபோது, அவரிடமிருந்த செல்லிடபேசி மற்றும், அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் சங்கிலி ஆகியவற்றைப்  பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். தகவலின்பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.