மண்ணச்சநல்லூர் அருகே நடத்துநர் வீட்டில் 5 பவுன் திருட்டு
மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியம் மாசி நகரைச் சேர்ந்தவர் கு. செல்லமுத்து (54). அரசுப் பேருந்து நடத்துநரான இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் 5 பவுன்
நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் யுவராணி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.