முகப்பு
திருச்சி

ரூ. 1 கோடி மோசடி: சேலம் அரிசி  வியாபாரி கைது

திருச்சியில் ரூ. 1 கோடி மோசடி செய்ததாக, சேலத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரியை திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருச்சியில் ரூ. 1 கோடி மோசடி செய்ததாக, சேலத்தைச் சேர்ந்த அரிசி வியாபாரியை திருச்சி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருச்சி காந்திச்சந்தை - தஞ்சை சாலையில் அரிசிக் கடை வைத்திருப்பவர் அபுதாகிர் (32). அவரிடம்  சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த சதாசிவம் (32) என்ற நபர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரிசி கொள்முதல் செய்து வந்தார். அரிசி வாங்கிய வகையில் சுமார் ரூ. 1 கோடி வரையில் நிலுவை இருந்தது. இது குறித்து கேட்டபோது தொகையை தராமல் இழுத்தடித்து வந்தார். இதனையடுத்து அபுதாகிர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநகர குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் பரிந்துரைத்ததன் பேரில் குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள்அமரன், ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சதாசிவத்தை போலீஸார் கைது செய்து திருச்சி மாவட்ட 5 ஆவது குற்றவியல் நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →