இருசக்கர வாகனம் திருடியவர் கைது
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவரை திருச்சி கோட்டை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மரக்கடை ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோ. சீனிவாசன் (30). இவர் காந்திச்சந்தையில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இவரது இரு சக்கர வாகனம் கடந்த 24-ஆம் தேதி காணாமல் போனது. இது குறித்து அவர் கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தேடி வந்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி காவிரிக்கரை ஓயாமாரி பகுதியில் உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வகையில் வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி வட்டம் தென்கரை வீரகனூர் பகுதியைச் சேர்ந்த க. சிவா (29) என்பதும், அவரே, சீனிவாசனின் இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, இருசக்கர வாகனத்தை மீட்டனர்.