திருச்சி

ஸ்ரீ நல்லாண்டவர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7.82 லட்சம்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஸ்ரீ நல்லாண்டவர் கோயில்  உண்டியல் காணிக்கை செவ்வாய்கிழமை எண்ணப்பட்டதில் ரூ.7,82,083 இருந்தது.
மணப்பாறை அருள்மிகு நல்லாண்டவர் வகையறா திருக்கோயில்களுக்கு உள்பட்ட ஸ்ரீ நல்லாண்டவர் கோயிலில் நிரந்தர உண்டியல் காணிக்கைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கோயில் நிரந்தர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, செயல் அலுவலர் வே.பிரபாகர், ஆய்வாளர் விஜயகுமார், பரம்பரை அறங்காவலர் கே.ஆர்.கே.முத்துவீர லெக்கைய நாயக்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில், ரூ.7,82,083 ரொக்கம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் 35 பணத் தாள், 26 கிராம் தங்கம், 32 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT