முகப்பு
திருச்சி

திருவானைக்கா பகுதிகளில் மே 22 மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக  திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 22) மின்தடை செய்யப்படுகிறது.

Updated On : 21 மே, 2018 at 7:34 AM
பகிர்:

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக  திருவானைக்கா பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 22) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக  ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர்  பிரகாசம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவானைக்கா 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் திருவானைக்கா சன்னதி வீதி, வடக்கு, தெற்கு உள்வீதிகள், ஒத்தத் தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன் சாலை, அம்பேத்கர் நகர்,  பஞ்சக்கரைச் சாலை,  அருள் முருகன் கார்டன்,  ஏ.யு.டி. நகர்,  ராகவேந்திரா கார்டன்,  காந்தி சாலை,  டிரங்க் சாலை,  கும்பகோணத்தான் சாலை, சிவராம் நகர்,  மேலக்கொண்டையம்பேட்டை,  சென்னை புறவழிச்சாலை, கல்லணைச் சாலை, கீழ, நடுக்கொண்டையம்பேட்டை, ஜம்புகேசுவரர் நகர், அகிலாண்டேசுவரி நகர்,  வெங்கேடசுவரா நகர்,  தாகூர் தெரு, திருவெண்ணெய்நல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, பிக்சாண்டார்கோயில் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட  டோல்கேட், பிச்சாண்டார்கோயில், மாருதி நகர், கோகுலம் காலனி, வி.என்.நகர், ராஜா நகர், ஆனந்த நகர், ராயர்தோப்பு, தாளக்குடி பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.