முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே கோயில் குடமுழுக்கு

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தளுதாளப்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 21 மே, 2018 at 7:36 AM
பகிர்:

மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள தளுதாளப்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவையொட்டி சனிக்கிழமை முதல் கால யாக பூஜை,  ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று  காலை 9 மணிக்கு  குடமுழுக்கு செய்யப்பட்டது.  தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள், சமேத மதுரை வீரன் ஆகிய பரிவார தெய்வங்களின் மூலஸ்தானங்களில் மகா அபிஷேகம் நடைபெற்று  தீபாராதனை நடைபெற்றது.  விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.