திருச்சி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் போலீஸில் ஒப்படைப்பு

DIN

துறையூர் அருகே வெளிநாடு அனுப்பவதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டு தலைமறைவானவரைப் பொதுமக்கள் பிடித்து வியாழக்கிழமை போலீஸில் ஒப்படைத்தனர்.
சோபனபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கனடாவில் உள்ள கார் தொழிற்சாலையில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு சேர்த்து விடுவதாகக் கூறி சோபனபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதாகவும், கூறியபடி எவரையும் அனுப்பவில்லை என்றும், பணம் கொடுத்தவர்கள் வெளிநாடு அனுப்பக் கோரி வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியையொட்டி சீனிவாசன் சோபனபுரம் சென்றார். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த உள்ளூரைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று விசாரித்த போது, விசா அல்லது பணத்துக்கு விரைவாக ஏற்பாடு செய்வதாக கூறி சமரசம் செய்தாராம்.  இதனையடுத்து சீனிவாசன் சோபனபுரத்தில் இருப்பதை அறிந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மற்ற பகுதியைச் சேர்ந்த சிலர் வியாழக்கிழமை இரவு சீனிவாசனைப் பிடித்து உப்பிலியபுரம் போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT