திருச்சி

வரதட்சிணை எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி

DIN

திருச்சி ஜமால் முகமது கல்லூரி கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின்  சார்பில் வரதட்சிணை எதிர்ப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி  வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
திருச்சி பாரதியார் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். இஸ்மாயில் முகைதீன் தலைமை வகித்தார். விடுதி இயக்குநர்கள்  கே.என். முகமது பாசில், எம்.ஏ. ஜமால் முகமது யாசீன் ஜூபேர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு யூத் எக்ஸ்னோரா நிறுவனரும்,  தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினருமான பி. மோகன், ஜமால் முகமது கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜ்முதீன் , பொருளாளர் எம்.ஜெ. ஜமால் முகமது  ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் மத்தியில் பேசினர். தொடர்ந்து  பாரதியார் சாலையின் ஒரு பகுதியிலிருந்து  ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி வரை மாணவர்கள் மனிதசங்கிலியில் அணிவகுத்து நின்றனர். வரதட்சிணை வாங்கக்கூடாது, அப்படி வாங்குவது சமுதாயத்துக்கு இழுக்கு, வரதட்சிணையைத் தவிர்ப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை அடங்கிய அட்டைகளையும் அவர்கள் ஏந்திச் சென்றனர்.
ஏற்பாடுகளை கைக்கூலி கைவிட்டோர் கழகத்தின் புல ஆலோசகர் முனைவர் எஸ். நாகூர் கனி,  இக்கழகத்தின் எம். முகமதுஇப்ராஹிம், முகமது ஆசிக், முகமது ரிஸ்வான், சையது சுல்தான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய அணியில் சாம்சன், சஹல், பந்த், துபே: கே.எல்.ராகுல் இல்லை; கில், ரிங்கு "ரிசர்வ்'

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

SCROLL FOR NEXT