திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.48 லட்சம் காணிக்கை

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் ரூ. 48.37 லட்சம் செலுத்தியிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இக்கோயிலில்  இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி  கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
முடிவில்  ரொக்கமாக ரூ. 48 லட்சத்து 37 ஆயிரத்து 613, தங்கம் 83 கிராம்,வெள்ளி 558 கிராம்,வெளிநாட்டு ரூபாய் 269-ம் கிடைக்கப் பெற்றது தெரியவந்தது. இத்தொகை கடந்த மாதத்தை காட்டிலும் ரூ. 21 லட்சம் குறைவாகும். 
காணிக்கை எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கம், ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.22 கோடி

காா் மோதியதில் முதியவா் பலி

வெப்பம் அதிகரிப்பு: மாநகராட்சியில் 86 சிகிச்சை மையங்கள் தயாா்

ரயில்வே பெண் மேலாளரிடம் கைப்பேசி பறித்த சிறுவன் கைது

குழாய் பதிக்க லஞ்சம்: பொதுப் பணித் துறை அலுவலா்கள் கைது

SCROLL FOR NEXT