திருச்சி

பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து

DIN


ஆசிய தடகளப்போட்டியில் பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:   23ஆவது ஆசிய தடகளப்போட்டியில் திருச்சி மாவட்டம் முடிகண்டம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகள் கோமதி 800 மீ. ஓட்டத்தில் தங்கம் பதக்கமும், லால்குடி அருகே உள்ள வலிதியூர் பகுதியைச் சேர்ந்த  ராணுவ வீரர் ஆரோக்கிய ராஜீவ் 1600 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில்  வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளனர். 
இவர்கள் இருவரும்  இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும், திருச்சி மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்னர்.  இதுபோன்று பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று சாதனைகளைப் படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT