திருச்சி

முக்கொம்பில் மூழ்கி உயிரிழந்த மாணவி 341 மதிப்பெண்களுடன் தேர்ச்சி

DIN

முக்கொம்பு காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி பலியான எஸ்எஸ்எல்சி மாணவி 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(38). இவருடைய மனைவி முத்துக்கண்ணு (35). இவர்களது, மகன் தரண்(17), மகள் கிருத்திகா(15), சித்தி சந்திரா(35), அவரது மகன் ஹரிஹர தீபக் (8) ஆகியோர்  ஞாயிற்றுக்கிழமை முக்கொம்பு சுற்றுலா மையத்திற்குச் சென்றனர்.  அங்கு காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது கிருத்திகா, தரண், ஹரிஹர தீபக் ஆகியோர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். 
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துகண்ணு, சந்திரா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
வழியிலேயே கிருத்திகா, ஹரிஹர தீபக்  இருவரும் உயிரிழந்தனர்.  தரண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
உயிரிழந்த மாணவி கிருத்திகா, திங்கள்கிழமை வெளியான தேர்வு முடிவில் 341 மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT