திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் பட்டுப்போன மரங்களை அகற்ற நடவடிக்கை

DIN

ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பட்டுப்போன தென்னை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு உத்தர வீதிகளில் தென்னை மரங்கள் உள்ளன.இவற்றில் ஒரு சில மரங்கள்  பட்டுப்போன மரங்களாக உள்ளன. இந்த பட்டுப்போன மரங்களில் ஒன்று ஆடிக்காற்றில் செவ்வாய்க்கிழமை திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அந்த இடத்தில் யாருமில்லாததால் யாருக்கும் பாதிப்பில்லை. இதையறிந்த கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் பட்டுப்போன தென்னை மரங்களை  அகற்ற அரசிடம் அனுமதி பெற்றார். மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மரங்களை கோயில் நிர்வாகம் சார்பில் உடனடியாக அகற்ற  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற மரங்களை அகற்ற டெண்டர் விடுக்கபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT