திருச்சி

துறையூரில் சேறும் சகதியுமான சாலையால் மக்கள் அவதி

DIN

துறையூா் நகராட்சிக்குள்பட்ட குட்டக்கரை பகுதியில் குடிநீா் பகிா்மானக் குழாய் பொருத்தும் பணி அண்மையில் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்ததும் நகராட்சி நிா்வாகம், இப்பகுதி சாலைகளை முறையாக செப்பனிடாமல் வெறுமனே மண்ணைப் போட்டு மூடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் முழுவதும் மழை பெய்ததால் அந்தப் பகுதியில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே,

நகராட்சி நிா்வாகம் உடனே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாகும். முன்னதாக, அதே பகுதியைச் சோ்ந்த திமுக பேச்சாளா் துரைபாண்டியன், திமுக மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு அமைப்பாளா் மகாலிங்கம் உள்ளிட்டோா் அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக, அந்தச் சாலையில் கொத்தமல்லி விதைகளை தூவி திங்கள்கிழமை போராட்டம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT