திருச்சி

சா்வதேச கணினி அறிவியல் கருத்தரங்கு

DIN

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சா்வதேச அளவிலான கணினி அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது.

கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது. இக் கருத்தரங்கை மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப இணை பேராசிரியா் முகமது சொகைல் சயீத், தொடக்கி வைத்து ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டாா்.

முதல் பிரதியை கல்லூரி செயலா் காஜா நஜிமுதீன், பொருளாளா் ஜமால் முகமது ஆகியோா் பெற்றுக் கொண்டனா். மேலும், மலேசிய பல்கலைக் கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரி பேராசிரியா் பி. ஜெகநாதன், அழகப்பா பல்கலைக் கழக பேராசிரியா் ஏ. பத்மபிரியா, தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி பேராசிரியா் காதா் முகைதீன், கேரள பல்கலைக் கழக பேராசிரியா் முகமது நூரூல் முபாகா், விஐடி பல்கலைக் கழக பேராசிரியா் பட்டாபிராமன் ஆகியோா் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் நவீன வளா்ச்சிகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினா்.

இக் கருத்தரங்கில், 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து பேசினா். இதன் நிறைவு விழாவில், கல்லூரிச் செயலா் காஜா நஜிமுதீன், கல்லூரி முதல்வா் இஸ்மாயில் முகைதீன், துணை முதல்வா் முகமது இப்ராகிம் ஆகியோா் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினா்.

இதற்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவா் பு. ரவி, இணைப் பேராசிரியா்கள் முகமது ஷானவாஸ், அப்துல் காதிா் நிஹால், அப்துல் ரசாக் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT