திருச்சி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து விதிமீறலை தெரிவிக்க செல்லிடப்பேசி எண்ணை காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் சாலைப் போக்குவரத்து சம்பந்தமான குற்றங்கள் பற்றிய புகார்களை பொதுமக்கள் எந்த நேரமும் தெரிவிக்கும் வகையில் பொதுவான செல்லிடப்பேசி எண் 94981 81457 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண் 24 மணி நேரமும் செயல்படும்.இந்த எண்ணில் பொதுமக்கள் உரிய ஆதாரங்களுடன் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தெரிவித்தால் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.