திருச்சி

தடகளம்: அகிலாண்டேசுவரி வித்யாலயா சாம்பியன்

DIN

திருச்சியில் நடைபெற்ற மாவ ட்ட அளவிலான கிடிஸ் தடகளப் போட்டியில் திருவானைக்கா அகிலாண்டேசுவரி வித்யாலயா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
புனித ஜான் வெஸ்ட்ரி  பள்ளி முன்னாள் மாணவர்கள், விடார் டெக் பிரைவேட் லிமிடெட், திருச்சி மாவட்ட கிடிஸ் விளையாட்டு முன்னேற்றச் சங்கம் ஆகியவை இணைந்து அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை அண்மையில் நடத்தின. 
திருச்சி மாவட்டத்திலுள்ள 34 பள்ளிகளில் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,550 மாணவ, மாணவிகள் தடகளப் போட்டிகளில்  பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் 54 புள்ளிகளுடன் அகிலாண்டேசுவரி வித்யாலயாசி.பி.எஸ்.இ பள்ளி முதலிடத்தையும், 31புள்ளிகளுடன் வாகீஷ வித்யாஸரம் பள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றன. 
மாணவிகள் பிரிவில் 39 புள்ளிகளுடன் அகிலாண்டேசுவரி வித்யலாயா பள்ளி முதலிடத்தையும், 34 புள்ளிகளுடன் தூய வளனார் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் பள்ளி இரண்டாமிடத்தையும் பெற்றன. மொத்தமாக  93 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை  அகிலாண்டேஸ்வரி பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சர்வதேச தடகள வீரர் பிரான்சிஸ் சகாயராஜ், டாக்டர் சாமுவேல் பால் தேவகுமார், சங்கச் செயலர் ஆர். கருணாகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி வாழ்த்திப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT