திருச்சி

துறையூர் நகரில் 2 டன் பிளாஸ்டிக்  பொருள்கள் பறிமுதல்

DIN

துறையூர் நகராட்சி நிர்வாகத்தினர் வணிக நிறுவனங்களில் கடந்த 2 தினங்களில் சோதனை நடத்தி சுமார் 2 டன் அளவில் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.  
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் துறையூர் நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன் தலைமையில் சுகாதார அலுவலர் ஆர். மூர்த்தி, ஆய்வாளர் எம். தீபன்சக்ரவர்த்தி மற்றும் போலீஸார் துறையூர் நகரில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு தினங்களில் நகரில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது உணவகங்கள், மளிகை, பேக்கரி, தேநீர், இறைச்சி மற்றும் துணிக் கடைகளிலும், பூ, காய் கனி விற்பனை செய்யுமிடங்களில் பயன்பாட்டில் இருந்த சுமார் 2 டன்  தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ. 25000 அபராதமும் விதிக்கப்பட்டது. உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT