திருச்சி

சிறைக் காவலர்கள் குடியிருப்பில் பொங்கல் விழா

DIN

திருச்சி மத்திய சிறையில் பணியாற்றும் சிறைக்காவலர்கள் குடியிருப்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 தமிழகத்தில் உள்ள சிறைவாசிகளின் எண்ணங்கள் நாளுக்கு நாள், ஒவ்வொரு பொழுதும் மாறுபடும் என்பதால் அவர்களை நல்வழிப்படுத்தும் காவலர்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருப்பதும் மிகக் குறைவு. எனவே, சிறைக்காவலர்களும், அலுவலர்களும்  பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக தமிழக சிறைத்துறை வரலாற்றில் முதல் முதலாக சிறைப்பணியாளர்கள் நலநிதியிலிருந்து ஒவ்வொரு சிறைக்கும் ரூ.50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தொகையை சிறைத்துறை கூடுதல் இயக்குநர் அசுதோஷ்சுக்லா வழங்கியிருந்தார். இதனைக் கொண்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. இதற்கென நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடந்த பரிசளிப்பு விழாவுக்கு திருச்சி சரக சிறைத்துறை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். சிறை கண்காணிப்பாளர் கி.முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT