திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள்

DIN


திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் தைத்தேர் திருவிழாவின் எட்டாம் திருநாளான சனிக்கிழமை தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
இக்கோயிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. எட்டாம் திருநாளான சனிக்கிழமை மாலை நம்பெருமாள், ரங்கவிலாச மண்டபத்திலிருந்து தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வையாளி கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. , சப்தாவரணம் ஜன.21 ஆம் தேதியும், ஆளும் பல்லக்கு ஜன.22 ஆம் தேதியும் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT