திருச்சி

பொறியியல் பணிகள்:  ரயில் சேவையில் மாற்றம்

DIN

தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக,  திருச்சி-தஞ்சை இடையே சனிக்கிழமை   (ஜூன் 1)  முதல் 30ஆம் தேதி வரை ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி-தஞ்சாவூர்-திருச்சி இடையேயான பயணிகள் ரயில்கள்  (வண்டி எண்கள் 76824-76827), ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய  5 நாள்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி-மயிலாடுதுறை-திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் (வண்டி எண் 56822-56821) ஜூன் 1 முதல் 30  வரையில்( ஞாயிறு தவிர) மற்ற 25 நாள்களும் திருச்சி-தஞ்சை இடையிலும்,  திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 56824) , ஜூன் 1 முதல் 10 ஆம் தேதி வரையில் கும்பகோணம் - மயிலாடுதுறை இடையிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் ( வண்டி எண். 16234),  ஜூன் 1 முதல் 30 ஆம் தேதி வரை,  ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக,  சோழகம்பட்டி,பூதலூர் பகுதிகளில்  நின்று,  சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக மயிலாடுதுறையைச் சென்றடையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT