திருச்சி

நெகிழிப் பொருள்களை இருப்பு வைத்தால் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் 

DIN

மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டும் வர்த்தக நிறுவனங்கள் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினாலோ, இருப்பு வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை நகராட்சிப் பகுதியில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களைச் சேமித்து வைத்தல், கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல், பகிர்ந்தளித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே நெகிழிப் பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யாமல், வர்த்தக நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதையும் மீறி மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் நெகிழிப் பொருள்களை சேமித்து, விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். 
மேலும், வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் என். ஸ்ரீதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT