திருச்சி

மாணவிக்கு கத்திக் குத்து: இளைஞர் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே  கல்லூரி மாணவியை வியாழக்கிழமை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

DIN

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே  கல்லூரி மாணவியை வியாழக்கிழமை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சிறுகாம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  நீலமேகம் மகள் வினோதினி (21), திருச்சி கல்லூரியில்  பிசிஏ இரண்டாம் ஆண்டு மாணவி. இவரும் இதே பகுதியைச் சேர்ந்த  மனீஷ் (25) என்ற இளைஞரும் காதலித்து வந்த நிலையில் மனீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரைப் புறக்கணித்து வந்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த மனீஷ் , வியாழக்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு அப்பகுதியில் பால் குடம் எடுத்துச் சென்ற வினோதியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த வினோதினி சிறுகாம்பூர் அரசு மருத்துவமனை, பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இளைஞரை அப் பகுதி மக்கள் பிடித்து வாத்தலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT