திருச்சி

உள்ளாட்சித் தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருச்சி மாநகராட்சி பகுதியில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

DIN

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருச்சி மாநகராட்சி பகுதியில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்,  திருச்சி மாநகராட்சியில் மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்கள் பார்வைக்காக ஆணையர் ந.ரவிச்சந்திரன் பட்டியலை வெளியிட்டார். மேலும், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொது மக்கள் பார்வைக்கு பட்டியல் வெளியிடப்பட்டது.
திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் மொத்தம் 765 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 3, 58, 758, பெண் வாக்காளர்கள் 3, 78, 678, திருநங்கைகள் 81 பேர் என மொத்தமாக  7, 37, 517 பேர் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT