திருச்சி

போலி உதிரி பாகங்கள் விற்றவர் கைது

DIN

திருச்சியில் பிரபல நிறுவனம் பெயரில் வாகன உதிரிப் பாகங்கள் விற்றதாக ஆட்டோமொபைல்ஸ் நிறுவன மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர உதிரிப்பாகங்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சதீஸ்குமார் என்பவர் காப்புரிமை அதிகாரியிடம் (சென்னை) புகார் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க  உத்தரவிடப்பட்டு ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் தனிப்படையினர் திருச்சியில் புதன், வியாழக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  ஆய்வில் பிரபல நிறுவனம் பெயரில் போலி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதுடன் அதற்கான ரசீதுகளும் வழங்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி உதிரிப் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 1.62 லட்சம். மேலும் போலி உதிரி பாகங்களை விற்ற கடையின் மேலாளர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

SCROLL FOR NEXT