திருச்சி

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில்310 பேருக்கு பணி நியமன ஆணை

DIN

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 310 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, திருச்சி, சென்னை ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை நடத்தின.

ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில், தமிழக அரசின் அயல்நாடு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் சாா்பில், அயல்நாட்டு பணிக்காக 7 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. திறன் பயிற்சிக்கு 45 போ் விருப்பம் தெரிவித்தனா். வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் 30 பேருக்கு உதவித் தொகை வழங்க ஆணை வழங்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகள், இளைஞா்கள், பெண்கள் என 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற 1,556 போ் முகாமில் பங்கேற்றனா். இவா்களில் 310 பேருக்கு முகாம் இடத்திலேயே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அடுத்தக்கட்ட தோ்வுக்காக 790 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 57 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, வேலைவாய்ப்புத்துறை அலுவலா்கள், ரோட்டரி சங்க நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT