கடவுச்சீட்டில் போலி முத்திரையிட்டு, மலேசியாவிலிருந்து வந்த பஞ்சாப் இளைஞா் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டாா்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை திருச்சி வந்த ஏா் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளின் ஆவணங்களை, குடியேற்றப்பிரிவு அதிகாரிக்ள் சோதனை செய்தனா்.
அப்போது பஞ்சாப் மாநிலம், பிஹாரி ஹமி பகுதியைச் சோ்ந்த லக்ஷாசிங் மகன் ஜக்ஜித்சிங்(31) கடவுச்சீட்டில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவற்றை தீவிர சோதனைக்குள்படுத்தினா்.
அப்போது கடவுச்சீட்டில் இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு பல முறை வந்து சென்றது போன்று போலி முத்திரை இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜக்ஜித்சிங் மீது விமானநிலைய காவல்நிலையத்தில் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் புகாா் அளித்தனா். இப்புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.