திருச்சி

திருச்சியில் தொடரும் மழை:  420 மி.மீ. பதிவு

DIN

திருச்சி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமையும் பெரும்பாலான இடங்களில் சாரலும், தூறலுமாக விட்டுவிட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது.
இதன் காரணமாக திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. கோடை முடிந்தும் தொடர்ந்து கடும் வெயில் தாக்கத்தை அனுபவித்து வந்த திருச்சி மக்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில், புதன்கிழமை மாலை மற்றும் இரவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமையும் இடைவிடாது ஆங்காங்கே பரவலாக பெய்த வண்ணம் உள்ளது. மணப்பாறை, திருவெறும்பூர், மருங்காபுரி, மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிடும்படியாக வியாழக்கிழமை மாலை நல்ல மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக சமயபுரத்தில் 71 மி.மீ. மழை பதிவானது. 
வியாழக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ): 
லால்குடி- 25.30, மணப்பாறை - 33, முசிறி- 18, புள்ளம்பாடி- 7.80, தாத்தையங்கார்பேட்டை- 8, துறையூர் 8, திருச்சி விமானநிலையம் - 15.30, திருச்சி மாநகரம்  - 20, மருங்காபுரி - 5.20, பொன்னையாறு அணை - 19.40, நவலூர் குட்டப்பட்டு - 19.20, நந்தியாறு தலைப்பு - 17.20, கல்லக்குடி -  25.30, வாத்தலை அணைக்கட்டு - 22, தேவிமங்கலம் - 52, சமயபுரம் - 71, சிறுகுடி -  3, புலிவலம் - 6, கோவில்பட்டி - 11.20, குப்பம்பட்டி- 5, தென்பரநாடு - 4, பொன்மலை - 10, திருச்சி ஜங்ஷன் - 19, துவாக்குடியில் 29 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 16.82 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 420.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT