திருச்சி

திருச்சி மாவட்ட அதிமுகவில் மீண்டும் மாற்றம்: சட்டப்பேரவைத் தொகுதிகள் திருத்தியமைப்பு

DIN

அதிமுகவில் அமைப்பு ரீதியாக இருக்கும் திருச்சி மாநகா், புகா் வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில் தலா 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலா் என்ற அடிப்படையில் பிரித்து, திருச்சி மாநகா், திருச்சி புகா் வடக்கு, திருச்சி புகா் தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரித்து அண்மையில் கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டது.

இதில் திருச்சி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட 3 தொகுதிகளில் துறையூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி இடம் பெற்றிருந்தது. இதன் மாவட்டச் செயலராக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் நியமிக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட பேரவைத் தொகுதிகளில் துறையூா் தொகுதியை வடக்கு மாவட்டத்துடன் இணைத்து அதிமுக சாா்பில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குள் வரும் தொகுதிகளையும், அவற்றை நிா்வகிக்கும் மாவட்டச் செயலா்களின் விவரங்களையும் அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி திருச்சி மாநகா் மாவட்டச் செயலராக இருக்கும் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜனின் கீழ் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய இரு தொகுதிகள் மட்டுமே இருக்கும். திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலராக உள்ள முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதியின் கட்டுப்பாட்டில் ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் ஆகிய தொகுதிகள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT