முகப்பு
திருச்சி

மணப்பாறை: கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி

மணப்பாறையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு நலித்திட்ட உதவிகள் வழங்கினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள்
பகிர்:

மணப்பாறையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுகவினர் அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு நலித்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின்  2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நகர செயலாளர் கீதா.மைக்கில்ராஜ், ஒன்றிய செயலாளர் ராமசாமி ஆகியோர் தலைமையில் திமுகவினரால் நகர, ஒன்றிய பகுதியில் அனுசரிக்கப்பட்டது.

கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மேளம், நாதஸ்வரம் இசைக்கப்பட்டது.

அதேபோல் மணப்பாறை பேருந்துநிலையம் பகுதியில், முன்னாள் நகர துணைச்செயலாளர் ஏ.பி.சரவணன் தலைமையில், வள்ளுவர் கோட்டம் தேரில் கருணாநிதி அமர்ந்து இருப்பது போல் வடிவமைத்து திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.