முகப்பு
திருச்சி

இ-பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி முதலமைச்சருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம்

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் முதல்வருக்கு அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 13 ஆகஸ்ட், 2020 at 6:12 PM
அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
பகிர்:

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி, திருச்சியில் டெண்ட் டீலர்ஸ் சங்கத்தினர் முதல்வருக்கு அஞ்சல் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவில் தான் மக்கள் பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் திருமணத்திற்கு டெண்ட்,பந்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்கார வேலைகள் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே திருமண மண்டபங்களில் 50 சதவீத அளவு மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும், தனி மனித இடைவெளியுடன் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர் திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து முதலமைச்சர் தனி பிரிவுக்கு ஒரு லட்சம் தபால்கள் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.