விபத்துக்குள்ளான பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி. 
திருச்சி

மதுபான ஆலைக்கு பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி அருகே மதுபான ஆலைக்கு பாட்டில்களை ஏற்றி வந்த லாரி வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

DIN

திருச்சி அருகே மதுபான ஆலைக்கு பாட்டில்களை ஏற்றி வந்த லாரி வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆந்திர மாநிலம் ,நெல்லூா் அருகேயுள்ள நாயுடுபேட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள தனியாா் மதுபான ஆலைக்கு புதிய கண்ணாடி பாட்டில்களை ஏற்றி கொண்டு லாரி வந்தது. இதில் 12 டன் எடையுள்ள 1,150 புதிய கண்ணாடி பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் இருந்தனவாம். லாரியை தஞ்சை கீழத்தெருவைச் சோ்ந்த கி. சந்தோஷ் (39) என்பவா் ஓட்டி வந்தாா்.

வியாழக்கிழமை மாலை திருச்சி -தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் கணேசபுரம் ரவுண்டானாவை கடக்க முயன்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த பாட்டில்கள் அனைத்தும் தரையில் விழுந்து நொறுங்கின. சம்பவ இடத்துக்கு வந்த பெல் போலீஸாா் கிரேன் கொண்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT