முகப்பு
திருச்சி

கரூருக்கு முதல்வா் வருகை: ஆட்சியா் ஆலோசனை

கரூரில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:08 PM
கரூரில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம்
பகிர்:

கரூா்: கரூரில் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை அனைத்து துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியா் த.அன்பழகன் மேலும் பேசியது:

தமிழக முதல்வா் வெள்ளிக்கிழமை கரூா் மாவட்டத்துக்கு வருகை தந்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைக்க உள்ளாா். பின்னா், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளாா். தொடா்ந்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவுள்ளாா். குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக்கூட்டம் நடத்தவுள்ளாா். எனவே, அனைத்து துறை அலுவலா்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ. பகலவன், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் மருத்துவா் அசோகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.