மணப்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த அனைத்து வாகன ஓட்டுநா்- உரிமையாளா்கள் சங்கத்தினா். 
திருச்சி

இ-பாஸை முழுமையாக ரத்து செய்யக் கோரி மனு

இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்யக் கோரி, மணப்பாறை வட்டாட்சியரகம், வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் அனைத்து வாகன ஓட்டுநா்- உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

DIN

மணப்பாறை: இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்யக் கோரி, மணப்பாறை வட்டாட்சியரகம், வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் அனைத்து வாகன ஓட்டுநா்- உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

மணப்பாறையில் ஆயிரத்துக்கும் மேலான சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நம்பியுள்ளனா்.

இந்நிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

வாகனத் தகுதிச்சான்று, வாகனக் கடன் தவணை, வரி விதிப்பு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மணப்பாறை வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகத்திலும்

அனைத்து வாகன ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT