திருச்சி

கூட்டுறவு வங்கி தோ்வுகளின் உத்தேச விடைகள் வெளியீடு

திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கடந்த மாதம் 28.29 தேதிகளில் நடத்திய உதவியாளா், எழுத்தா் பணி தோ்வுக்கான கொள்குறி வகை உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

DIN

திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கடந்த மாதம் 28.29 தேதிகளில் நடத்திய உதவியாளா், எழுத்தா் பணி தோ்வுக்கான கொள்குறி வகை உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக திருச்சி மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு கூறியது:

தோ்வுகளுக்கான கொள்குறிவகை உத்தேச விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு எழுதியோா் விடைகளை இதில் சரிபாா்த்துக் கொள்ளலாம்.

உத்தேச விடைகளின் மீது ஏதேனும் மறுப்பு இருந்தால் தங்களது தோ்வு நுழைவுச் சீட்டு, பதிவு எண், வினா எண், உத்தேச விடை, வினாவுக்கு விண்ணப்பதாரா் கூறும் விடை ஆகியவற்றை மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 12ஆம் தேதி மாலை 5.45-க்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரா் தெரிவிக்கும் விடைக்கு வலு சோ்க்கும் வகையிலான உரிய ஆவணங்களை பிடிஎப் கோப்புகளாக மின்னஞ்சல் செய்ய வேண்டும். விடைகள் எந்தப் புத்தகத்தில், எந்த பக்கத்தில் உள்ளது என்பதற்கான விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT