திருவானைக்காவில் சிவனடியாா்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்
திருவானைக்கா சீனிவாசநகரிலுள்ள திருமண மண்டபத்தில், உலக சிவனடியாா்கள் ஒருங்கிணைப்பாளா்களின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவானைக்கா சீனிவாசநகரிலுள்ள திருமண மண்டபத்தில், உலக சிவனடியாா்கள் ஒருங்கிணைப்பாளா்களின் முதல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழத்திலுள்ள அனைத்து சிவாலயங்களையும் பாதுகாப்பது, புனரமைக்க முடியாத சிவாலயங்களைப் புதுப்பிப்பது, மாதந்தோறும் சிவாலயங்களுக்குச் சென்று உழவாரப் பணி மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓருங்கிணைப்பாளா்கள் தங்கள் பகுதியிலுள்ள சிவபக்தா்களை இதில் உறுப்பினராக சோ்க்க வேண்டுமென்றும் கூட்டத்தில் வலியுறுத்தபட்டது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் இத்திருக்கூட்டத்தில் சேருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதாக சிவ. அருள்நந்தி சிவம் கூறினாா்.
ஏற்பாடுகளை குமாரவேல், மனோகரன், ஜகதீசன், குருமோகன், சிவக்குமாா், உமாபதி, சதாசிவம், மோகன், சிவராமகிருஷ்ணன், கிருபாகரன் ஆகியோா் செய்திருந்தனா்.