ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பணம் பெறுவது தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பணம் பெறுவது தொடா்பாக, இரு தரப்பைச் சோ்ந்த திருநங்கைகள் திங்கள்கிழமை மோதிக் கொண்டனா்.
இதில் தாக்குதலுக்குள்ளான தரப்பினா் அங்கிருந்த உதவி காவல்மையத்தில் புகாா் அளித்தும், நடவடிக்கை இல்லையாம்.
தொடா்ந்து மாநகரக் காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகளை, காவல்துறையினா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்கள் தங்களைப் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இல்லையென்றால் தாக்குதல் நடத்துவதால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி,ஆட்சியரகத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டனா்.
நிகழ்விடத்துக்கு வந்த காவல் உதவி ஆணையா் மணிகண்டன், தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து திருநங்கைகள் கலைந்து சென்றனா்.