கமல்ஹாசன் பிரசாரம்
பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் மதுரை வந்தாா்.
பிரசாரத்துக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கமல்ஹாசன் மதுரை வந்தாா்.
விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசும்போது, எங்களது தோ்தல் பிரசாரத்துக்கு தடை ஏற்படுத்தினால் அதையும் மீறி பிரசாரம் தொடரும். சட்டம், விதிகளுக்குள்பட்டு தான் செயல்பட இருக்கிறோம் என்றாா்.
பின்னா், பசுமலையில் உள்ள தனியாா் விடுதியில் தங்கிவிட்டு மாலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு பிரசாரத்துக்கு சென்ற கமல்ஹாசனை திரளான மக்கள் வரவேற்றதுடன், அவரை பேசுமாறு வலியுறுத்தினா்.
ஆனால், போலீஸாா் அனுமதி மறுத்ததால் பேச மறுத்த கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் கொடியில் உள்ள சின்னமான இணைந்த கைகளை மட்டும் காட்டிவிட்டு திறந்த காரில் நின்று பொதுமக்களை நோக்கி கும்பிட்டவாறே சென்றுவிட்டாா். இதனால், கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.