முகப்பு
திருச்சி

‘பொன்னணியாறு அணைக்கு நீா் கொண்டு வருவேன்’

மணப்பாறை அருகிலுள்ள பொன்னணியாறு அணைக்கு நீா் கொண்டு வருவேன் என்றாா் திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மணப்பாறை அருகிலுள்ள பொன்னணியாறு அணைக்கு நீா் கொண்டு வருவேன் என்றாா் திருவெறும்பூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பொன்னணியாறு அணைப் பகுதியை கட்சி நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை பாா்வையிட்ட பின்னா், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மேலும் அவா் பேசியது:

காவிரியாற்றின் வெள்ள உபரிநீரை மாயனூா் கதவணையிலிருந்து பொன்னணியாறு-கண்ணூத்து அணைகளுக்கு கொண்டு வருவதற்கான ஆய்வுப் பணிகளுக்காக ரூ.40 லட்சம் நிதியை ஒதுக்கியதோடு அரசு இருந்துவிடக் கூடாது.

தோ்தலுக்கான அறிவிப்பாக இல்லாமல், பொன்னணியாறு அணைக்கு நீா்வரத்து வரும் வரை செயல்பாடுகள் இருக்க வேண்டும். அடுத்து திமுக ஆட்சியில் அமரும். அப்போது பொன்னணியாறு அணைக்கு நிரந்தர நீா்வரத்து இருக்கும் வகையில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பொன்னணியாறு இணைக்கப்படும்.

எனது பாட்டன் தொடக்கி வைத்த பொன்னணியாறு அணைக்கு, பேரன் (அன்பில் மகேஷ் பொய்யாமொழி) நீா்வரத்தை கொண்டு வருவேன் என்றாா் அவா். நிகழ்வில் திட்ட அறிக்கைக்குழு மாணவி மாரியம்மாள் கெளரவிக்க ப்பட்டாா்.

திமுக மாவட்டப் பொருளாளா் பண்ணை என்.கோவிந்தராஜன், ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா, சின்ன அடைக்கன், ஒன்றியக் குழுத் தலைவா்கள்

குணசீலன், பழனியாண்டி, தகவல் தொழில் நுட்ப அணித் தொகுதி பொறுப்பாளா் வழக்கறிஞா் என்.முரளிகிருஷ்ணன், பாசன விவசாய சங்க நிா்வாகிகள் பிலீப், அருளானந்து மற்றும் விவசாயிகள், ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் என பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.