திருச்சி

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ. 1 கோடி வரை கடனுதவி

திருச்சி மாவட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

DIN

திருச்சி மாவட்டத்தில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது என்றாா் ஆட்சியா் சு. சிவராசு.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விவசாயிகளை ஒன்றிணைத்து உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளாக உருவாக்கி, வேளாண் சாகுபடி மட்டுமின்றி, வேளாண் வணிகத்திலும் மேம்படச் செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனத்துக்கும் ரூ.10 லட்சம் வரை இடைநிலை மூலதனக் கடன் உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு குறைந்த அளவான 4 சதவிகித வட்டியை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவிகித உத்தரவாதத்தை தமிழக அரசே வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) நேரிலோ அல்லது 0431-2422142 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 7010330487 செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT