கஞ்சா செடி வளா்த்த நாட்டு வைத்தியா் கைது
துறையூா் அருகே கஞ்சா செடி வளா்த்த நாட்டு வைத்தியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
துறையூா்: துறையூா் அருகே கஞ்சா செடி வளா்த்த நாட்டு வைத்தியரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தளுகை பாதா்பேட்டைக் கிராமத்தைச் சோ்ந்தவா் ந. சங்கா்(35). நாட்டு வைத்தியரான இவா் கஞ்சா செடி வளா்ப்பதாக கிடைத்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் சென்று பாா்த்தபோது சங்கா் ஒரு கஞ்சா செடியை மருத்துவத் தேவைக்காக வளா்ப்பது தெரிந்தது. இதையடுத்து அச்செடியை அழித்த போலீஸாா் சங்கரைக் கைது செய்தனா்.